Home இந்தியா யாகூப் மேமனின் மனு தள்ளுபடி: நாளை காலை தூக்கு உறுதி!

யாகூப் மேமனின் மனு தள்ளுபடி: நாளை காலை தூக்கு உறுதி!

601
0
SHARE
Ad

yaபுதுடில்லி, ஜூலை 29- மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

மேலும்,யாகூப் மேமன் அனுப்பிய கருணை மனுவை மகாராஷ்ட்டிர மாநில ஆளுநரும் நிராகரித்து விட்டார்.ஆதலால்,யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

நாக்பூர் சிறையில் அவர் தூக்கிலிடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

நாளை தூக்கில் இடப்பட உள்ள நிலையில், கடைசி முயற்சியாக யாகூப் மேமன், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்குப் புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதுவும் பயனளிக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, நாளை தூக்கு என்பது உறுதி.

இந்நிலையில் ,யாகூப் மேமன் கருணை மனுவை மறு பரிசீலனை செய்து அவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்வதே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் எனக் கோரி, மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.