Home இந்தியா யாகூப் மேமனின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!

யாகூப் மேமனின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!

554
0
SHARE
Ad

erபுதுடெல்லி, ஆகஸ்ட் 7- யாகூப்மேமன் தனது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டிக் கடைசி நேரத்தில் தாக்கல் செய்த திருத்த மனுவை நிராகரித்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கும் அவரது வீட்டிற்கும் போட்டிருந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

1993- ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் படுபாதகச் செயலுக்குக் காரணமானவர்களில் ஒருவனான யாகூப் மேமனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டி, தொடர்ச்சியாக ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் யாகூப் மேமன் அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்படதைத் தொடர்ந்து, இறுதி முயற்சியாகத் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவன் ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை தூக்கில் போடப்பட்டான்.

#TamilSchoolmychoice

தூக்கில் போடப்பட்ட ஒரு வாரம் கழித்து, நேற்று, யாகூப் மேமன் மனுவைத் தள்ளுபடி செய்த  அமர்வுக்குத் தலைமை வகித்த நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகிய யாகூப் மேமனின் சகோதரன் டைகர் மேமன், யாகூப் மேமனின் தூக்குக்கு முன்பு 45 நிமிடம் யாகூப் மேமனின் குடும்பத்தினருடன் கைபேசியில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலை மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.