மும்பை, ஜூலை 30 – மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் யாகூப் மேமனின் தூக்கு உறுதியாகி உள்ளது. இன்று காலை சரியாக 7 மணியளவில் அவர் தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தன்டனையை 14 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவரின் வாதத்தை நேற்று நள்ளிரவு வரை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், விடியற் காலையில் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, நாக்பூர் சிறையில் யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான பணிகளை சிறைத் துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதால், எத்தகைய அசம்பாவிதங்களும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சிறை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் 500 மீட்டர் சுற்றளவிற்கு144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.