Home நாடு விமானத்தின் பாகத்தை ஆராய மலேசியக் குழு ரியூனியன் தீவிற்கு விரைந்தது!

விமானத்தின் பாகத்தை ஆராய மலேசியக் குழு ரியூனியன் தீவிற்கு விரைந்தது!

493
0
SHARE
Ad

liow-tiong-laiகோலாலம்பூர், ஜூலை 30 – மடகாஸ்கர் அருகே உள்ள பிரெஞ்ச் தீவான ரியூனியனில், விமானத்தின்  உடைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதனை ஆராய, முக்கிய அதிகாரிகள் குழு குறிப்பிட்ட அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் எம்எச் 370-யின் பாகம் தானா? என்பதை ஆராய்வது அவசியமாகும். அதனால், முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். வெகு விரைவில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

2 மீட்டர் நீளம் கொண்ட அந்த உடைந்த பாகம், போயிங் 777 இரக விமானத்தின் பாகம் தான் என நம்பப்படுகின்றது.