இந்நிலையில், மதுக்கடைகளை அடைக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட, மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அவர்களைக் காவல்துறையினர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments