இந்த பட்டியல் பாக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் அறிவிப்பு தான் என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற தேசிய கருத்துக்கணிப்பின் படி தான் இந்த பட்டியல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்தபடி, டொனால்டு டிரம்ப் மற்றும் ஜெப் புஷ் முன்னிலை வகிக்கின்ன்றனர். இதற்கிடையே, குறைந்த வாக்குகள் பெற்றவர்களுக்கான விவாதம் நேற்று மதியம் தொடங்கியது. 13-வது நபராக பேசிய ஜிண்டாலின் பேச்சு அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் தனது வாதத்தில், அதிபர் ஒபாமாவை மட்டுமல்லாமல் தற்போது முன்னிலை வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “அமெரிக்காவிற்கு தற்போது நல்ல செயல்திறன் மிக்கவர்கள் தான் தேவை. வெறும் பேச்சாளர்கள் அல்ல. அமெரிக்காவிற்கு தற்போது தேவைப்படும் உண்மையான தலைமைத்துவத்தை என்னால் கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜிண்டாலின் பேச்சு ஈர்ப்புடையதாக இருந்தாலும், முன்னிலை வேட்பாளர்களின் விவாதங்களுக்கு ஈடாக பிரகாசிக்க முடியவில்லை என்றும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.