Home உலகம் ஒரு இந்தியர் பிரிட்டன் பிரதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரிட்டன் எம்பி ஆருடம்!

ஒரு இந்தியர் பிரிட்டன் பிரதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரிட்டன் எம்பி ஆருடம்!

555
0
SHARE
Ad

vizலண்டன், ஆகஸ்ட் 8 – “இந்தியர் ஒருவர், பிரிட்டன் பிதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை” என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கெயித் வாஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை, இந்தியாவிடமே கொடுக்க வேண்டும் என பிரிட்டனில் தொடர்ந்து தீவிர பிரச்சாரங்களை நடத்தி வரும் கெயித் வாஸ், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை, கொடுக்க முடியாது என்று சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. பிரிட்டன் அரசு இந்தியாவுடனான உறவினை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால், வைரத்தை இந்தியாவிடம் கொடுப்பதே முறை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசியல் விவகாரங்களில் இந்தியர்களின் பங்கு எத்தகையதாக உள்ளது என்ற கேள்விக்கு, அவர், “இந்தியர் ஒருவர், பிரிட்டன் பிதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கெயித் வாஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.