Home இந்தியா அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது

அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது

726
0
SHARE
Ad

Tamil-Daily-News_24207270146திருவனந்தபுரம், ஆகஸ்ட் 8- ஆண்டுதோறும் கேரளாவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் மாநில அளவில் ஆண்டு தோறும் நடைபெறும் பள்ளிக்கூட அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்குக் கேரள அரசு பரிசு வழங்கிக் கெளரவித்து வருகிறது.

அவ்வகையில்,இந்த ஆண்டு நடைபெறவுள்ள அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரளாவின் கல்வித்துறை அமைசர் பி.கே.அப்துல் ராப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அறிவியல் துறைகளில் அப்துல் கலாம் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டும் வகையில் அவரது பெயரில் தங்கக் கோப்பை வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரளாவில் உள்ள அறிவியல் தொழில்நுடபப்  பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்டுவதாக அறிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.