இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், “இளையராஜாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வாயுப் பிரச்சனை காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர், உடல் நலன் தேறி வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இளையராஜாவிற்கு இதய நோய் காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Comments