வெள்ளிக்கிழமையன்று இரவு இளையராஜா தனது அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தவுடன், மிகவும் சோர்வாக உணர்ந்ததால் அவரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
லேசான மூச்சுத்திணறல் இருந்ததால் அவருக்கு இதயம் முதலான அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் முழு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடல்நிலை சீராக இருந்தததால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் நேராக வீட்டுக்குச் செல்லாமல், அங்கிருந்து பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்குச் சென்றார்.
அங்கு காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் ஈடுபட்டார்.
அவரது தொழில் பக்தி அனைவரையும் சிலிர்க்க வைத்தது.