Home உலகம் முதல் விடியலை நோக்கி சவூதி அரேபிய பெண்கள் – வாக்குரிமைக்கு அனுமதி!

முதல் விடியலை நோக்கி சவூதி அரேபிய பெண்கள் – வாக்குரிமைக்கு அனுமதி!

637
0
SHARE
Ad

saudiரியாத், ஆகஸ்ட் 21 – சவூதி அரேபிய பெண்கள் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் நகராட்சித் தேர்தலில் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக நிற்பதற்கும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் சவூதி அரசர் அப்துல்லா, பெண்களின் நீண்ட கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு, இதற்கான அனுமதியை வழங்கினார். அதன் பிறகு தேர்தல், 4 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், பெண்கள் டிசம்பர் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சவூதி ஊடகங்களின் தகவல்படி, சுமார் 70 பெண்கள் வேட்பாளர்களாக நிற்கின்றனர். மேலும், 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பிரச்சாரங்களுக்கு மேற்பார்வையாளர்களாக இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது தொடர்பாக சமூகவியலாளர் ஃபவ்சியா அபு காலித் கூறுகையில், “பெண்களின் உரிமை தொடர்பாக அரசின் கண்ணோட்டம் மாறி இருப்பது வரவேற்பிற்குரியது. எனினும், எதிர்ப்புகள் ஏற்படாமல் இல்லை. வாக்குரிமை அளிக்கப்பட்டதை மேற்கத்திய தாக்கம் என்று பழமைவாதிகள் சிலர் கருதுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கத்திய பெண்கள் மட்டுமல்லாது ஆசியப் பெண்களும் விமான ஓட்டிகளாக சாதித்து வரும் நிலையில், வாகனம் ஓட்டுவதற்குக் கூட சவூதிப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்று தான். இப்படி சவூதி பெண்கள் இவற்றை எல்லாம் செய்யக் கூடாது என பட்டியலே இருக்கின்றது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்த பட்டியலில் இரண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.