Home Featured நாடு 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை விசாரணை முடியவில்லை: ஊழல் தடுப்பு ஆணையம்

2.6 பில்லியன் ரிங்கிட் தொகை விசாரணை முடியவில்லை: ஊழல் தடுப்பு ஆணையம்

580
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என மலேசிய ஊழல் தடுப்பாணையம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை முடிந்துவிட்டதாக ஆணையமோ அல்லது அதன் தலைவர் டான்ஸ்ரீ அபுகாசிமோ எத்தகைய அறிவிப்பும் வெளியிடவில்லை என ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

1MDBஇந்த விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையம் முடித்துவிட்டதாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட புகார்களை அடுத்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“குறிப்பிட்ட அந்த 2.6 பில்லியன் தொகை மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரிடமிருந்தே வந்துள்ளது. அது 1எம்டிபி நிறுவனத்திலிருந்து வரவில்லை என கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த தொகை குறித்தும், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி.இண்டர்நேஷனல் குறித்தும் விசாரணைகள் நீடித்து வருகிறது” என்று ஊழல் தடுப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.