கோலாலம்பூர் – குற்றவியல் சட்டம் பிரிவு 500-ன் கீழ் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விசாரணை செய்யப்படுவார் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்ட மகாதீர், அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அவர் மீது இந்த விசாரணை நடத்தப்படுவதாக காலிட் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீரை கடுமையான முறையில் காவல்துறை விசாரணை செய்யுமா? என்ற கேள்விக்கு, தாங்கள் மிகவும் பக்குவமாகத் தான் விசாரணை செய்யப் போவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகாதீர் தற்போது மலேசியாவில் இல்லை என்றும், ஜோர்டான் சென்றுள்ள அவர் செப்டம்பர் 9-ம் தேதிக்குப் பிறகு தான் நாடு திரும்புவார் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.