Home உலகம் மோடியுடன் சந்திரிகா குமாரதுங்கா இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை!

மோடியுடன் சந்திரிகா குமாரதுங்கா இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை!

595
0
SHARE
Ad

chandrika-bandaranaikeபுதுடில்லி –  முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் இன்று அனைத்துலக இந்து – பௌத்த மாநாடு வியாழக்கிழமை தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இலங்கை, தாய்லாந்து, மங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதில் பௌத்த மதத்தின் சார்பில் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலந்து கொள்கின்றார்.

இந்த மாநாட்டின் முடிவில் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து, இந்தியா- இலங்கையிடையிலான உறவு குறித்தும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.