சென்னை – சென்னையிலிருந்து மங்களூர் சென்ற மங்களூர் விரைவு ரயில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் இன்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 42 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து காரணமாக மதுரை முதலான தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அந்த ரயில்கள் எல்லாம் மாற்றுப் பாதை வழியாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த விவரங்களை அறிய உதவி மையத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மார்க்கமாகச் செல்லக்கூடிய ரயில்கள் பற்றி அறிய 9003864962
விழுப்புரம் -9443644923
கடலூர் – 04143- 263767
சென்னை எழும்பூர் -044-29015203
இந்த நான்கு எண்களில் விபத்து பற்றிய பொதுவான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், ரயில் தடம் புரண்ட காரணத்தினால் 800 மீட்டர் அளவுக்குத் தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதைச் சரி செய்யும் பணியும் நடைபெறுகிறது.