Home Featured நாடு “நான் எந்த ஒரு பேரணியையும் ஆதரிக்கவில்லை” – கமலநாதன் அறிக்கை

“நான் எந்த ஒரு பேரணியையும் ஆதரிக்கவில்லை” – கமலநாதன் அறிக்கை

619
0
SHARE
Ad

P. Kamalanathanகோலாலம்பூர் – தன்னைப் பற்றி நட்பு ஊடகங்களில் பரவிய செய்தியை மறுத்து உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கமலநாதன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியில், புக்கிட் செந்தோசா பகுதியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, சுமார் 220 சிவப்பு சட்டைகளை வழங்க உதவி செய்ததாக கமலநாதனைப் பற்றி வாட்சாப், பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியது.

அந்தச் சட்டைகளை உலுசிலாங்கூர் நாடாளுமன்ற அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது கமலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“உலுசிலாங்கூர் தொகுதியில் உள்ள சில சமுதாயத் தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு நிதி அளிக்கும் படியும், பொருட்கள் சிலவற்றை வழங்கி உதவி செய்யும் படியும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு கோரிக்கைகள் வரும்.”

“சின்னச் சின்ன நிகழ்ச்சிகளுக்கும், கூட்டங்களுக்கும் எனது அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் கோரிக்கைகள் வரும்”

“இது எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்படும் அனுபவம் மற்றும் நல்ல நோக்கிற்கு ஆதரவு தரும்படி கோரிக்கைகள் வருவது வழக்கம்”

“அது போன்ற இயக்கங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு உதவும் ஒரு நல்ல நோக்கில் சில வசதிகளை அவர்களுக்கு செய்து தருவோம்”

“நான் இங்கு திட்டவட்டமாக ஒன்றைக் கூறுகிறேன். இனப் பாகுபாட்டைத் தூண்டிவிடும் அல்லது இந்த நாட்டின் சட்டங்களை மீறும் எந்த ஒரு பேரணியையும் அல்லது ஒன்று கூடலையும் நான் ஆதரிக்கவில்லை”

“அரசு சாரா இயக்கங்களுக்கு உதவி செய்யும் நோக்கில், எனது சேவை மைய அதிகாரிகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ளாமல் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார்கள் ”

“இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் மிக கவனமுடன் பார்த்துக் கொள்கிறோம்” – இவ்வாறு கமலநாதன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு – செல்லியல்