Home உலகம் மெக்கா மசூதி கிரேன் விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

மெக்கா மசூதி கிரேன் விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

886
0
SHARE
Ad

15-1442297007-mecca-grand-mosque-crane-crash43-600ரியாத் – புனித மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி சவுதி அரேபியாவின் மெக்கா பெரிய மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, திடீரென ராட்சத கிரேன் ஒன்று முறிந்து விழுந்தது.

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் உடல் நசுங்கி நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தோரில் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு இந்தியர்களும் அடங்குவர். மேலும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 28 இந்தியர்களும் அடங்குவர்.

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்த 28 இந்தியர்களில் 9 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

உயிரிழந்த 9 இந்தியர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளன. எனினும் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட வில்லை.

மேலும் 19 இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என்று விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.