Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமார் அணியில் துணைத் தலைவராகச் சிம்பு போட்டி

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமார் அணியில் துணைத் தலைவராகச் சிம்பு போட்டி

882
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_95682489872சென்னை –  நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் அணி சார்பில் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சரத்குமார் அணியை ஆதரிக்கும் நடிகர் நடிகையர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார்,

“விஷால் அணியினர் என் மீது தவறான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். தொடர்ந்து தவறான பிரச்சாரங்களைச் செய்து வந்தால், விஷால் அணியினர் தொடர்பான முக்கிய ரகசியத்தை 15 நாட்களுக்குள் வெளியிடுவேன்.

#TamilSchoolmychoice

நான் உண்மைய பேசினால் விஷால் அணியினருக்குச் சிரமம். நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது” என்று கூறினார்.

மேலும்,நடிகர் சங்கத் தேர்தலில் அவர்களது அணி சார்பில்  துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

மற்ற பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
சரத்குமார் அணி சார்பில் துணைத் தலைவராகப் போட்டியிடுவது குறித்து நடிகர் சிலம்பரசன், “சரத்குமார் அணி தான் நடிகர்களுக்காகப் பாடுபடுகிறது.நடிகர் சங்கத் தேர்தலில் உண்மை தான் வெற்றி பெறும்” என்று கூறினார்.