Home Featured நாடு 1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!

1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!

863
0
SHARE
Ad

FBIவாஷிங்டன்: உள்நாட்டு அரசியலையே ஒரு கலக்கு கலக்கி வரும் 1எம்டிபி ஊழல் அனைத்துலக விவகாரமாகி, ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) 1எம்டிபி மீதான தனது புலன்விசாரணையைத் தொடக்கியுள்ளதாக பிரபல அனைத்துலக வணிகப் பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த வகையான விசாரணைகள் என்பது போன்ற விரிவான செய்திகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

நஜிப் மீதான ஊழல் புகார்களைக் கூறியிருந்த அம்னோ பத்து கவான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹாசான் நாளை திங்கட்கிழமை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறையினரை சந்திக்கவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, ஆறு நாட்கள் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில்தான் 1எம்டிபி மீதான ஊழல் குறித்து விசாரணைகள் தொடங்கப்படும் என எஃப்.பி.ஐ. அறிவித்துள்ளது.