Home இந்தியா கட்சி நடத்த பணமில்லை: கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிக்கும் காங்கிரஸ்!

கட்சி நடத்த பணமில்லை: கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிக்கும் காங்கிரஸ்!

594
0
SHARE
Ad

sonia-gandhiபுதுடில்லி காங்கிரஸ் கட்சியை நடத்த போதுமான நிதியில்லாமையால், நாடெங்கும் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒரு மாத சம்பளத்தைக் கட்சிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதேபோல், காங்கிரஸின் மூத்ததலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூ. 1 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நன்கொடைகள் அனைத்தையும் அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கட்சி வளர்ச்சி நிதிக்காகக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 250 தர வேண்டுமென்றும், இதில் 75 சதவீதம் மத்திய காங்கிரஸிற்கும் 25 சதவீதம் மாநிலக் காங்கிரஸிற்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் மோதிலால் வோரா தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டதாலும், மாநிலங்களுக்கு ஏராளமான நிதி பிரித்தளிக்கப்பட்டதாலும் காங்கிரஸ் கட்சி நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.