Home உலகம் துனிசியா தேசிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

துனிசியா தேசிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

651
0
SHARE
Ad

tunisiaஆஸ்லோ – கடந்த சில வருடங்களில், அரபு நாடுகள் சிலவற்றில் சர்வாதிகார ஆட்சி நீங்கி ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்றால் அதற்கு, வட ஆப்பிரிக்காவின் முக்கிய நாடுகளுள் ஒன்றான துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. கடந்த 2010-ம் ஆண்டு, துனிசியா அதிபர் அபிதின் பென் அலிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம், மெல்ல மெல்ல எகிப்து, லிபியா, சிரியா, ஏமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் பரவியது.

உச்சகட்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த 2011-ம் ஆண்டு துனிசியாவில் அதிபர் பென் அலி பதவியில் இருந்து துரத்தப்பட்டார். அதன் பிறகு அங்கு நிகழ்ந்தது அனைத்துமே ஜனநாயக அரசியல் தான். அப்படி ஜனநாயகம் மலர்வதற்கு காரணமாக இருந்தது அமைப்பு தான் துனிசியா தேசிய பேச்சுவார்த்தைக்குழு (Tunisia national dialogue quartet).

tunisiaflag இந்த குழுவை துனிசியாவின் மிக முக்கிய நான்கு அமைப்புகள் சேர்ந்து நிர்வகித்தன. மக்கள் புரட்சி தீவிரவாதமாக மாறி வரும் இந்த காலகட்டத்தில், அதனை அப்படியே ஜனநாயகமாக மாற்றிய பெருமை இந்த அமைப்புகளைத் தான் சாரும்.

#TamilSchoolmychoice

அந்த குழுவிற்கு தான், 2015-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.