Home Featured உலகம் போதை இளைஞர்களின் கடைசிப் பயணம்! (பரபரப்பான காணொளி)

போதை இளைஞர்களின் கடைசிப் பயணம்! (பரபரப்பான காணொளி)

719
0
SHARE
Ad

லண்டன் – போதை வஸ்துவைப் பயன்படுத்திய இருவர், தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அதிவேகமாக ஒருவர் காரை செலுத்த, மற்றொருவர் அதைப் படம் பிடிக்க இறுதியில் கார் விபத்திற்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைகின்றனர்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரிட்டிஷ் காவல்துறையால் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியை இதுவரை 9 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

அந்தக் காரை செலுத்திய கைல் கேர்போர்டு (வயது 20) மற்றும் அவரது நண்பர் மைக்கேல் ஓவன் (வயது21) ஆகிய இருவரும் சம்பவத்தன்று கடுமையாக போதை மருந்தை எடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஓவன் காணொளியைப் பதிவு செய்ய, படுவேகமாகக் காரை செலுத்துகிறார் கேர்போர்டு, கார் சாலையில் அங்குமிங்கும் அலசிக் கொண்டே செல்கிறது. இறுதியில் ஒரு பெரிய சத்தத்துடன் எதிலோ மோதுகிறது. சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.

அந்தக் காணொளி இங்கே:

https://www.youtube.com/watch?v=K39N4PvKQxc

 

Comments