‘பிக் பில்லியன் டே’ நடைபெற்ற 5 நாட்களில் மட்டும் அந்நிறுவனம் 200 மில்லியன் டாலர்கள் அளவிற்கு திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அங்கீத் நகோரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இம்மாதம் 13-ம் தேதி முதல் நிமிடத்திற்கு 250 திறன்பேசிகள் ஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பில்லியன் டே தள்ளுபடியில் 60 மில்லியன் டாலர்கள் அளவிற்கு திறன்பேசிகள் விற்பனையாகின. தற்போது அதைக் காட்டிலும் பல மடங்கு விற்பனை பெருகி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஃப்ளிப்கார்ட் இந்த பிக் பில்லியன் டே தள்ளுபடியில், பல்வேறு வர்த்தக சூதுகளை நடத்தி வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.