Home Featured நாடு “பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்” – பெற்றோர் ஆசிரியர் சங்கம் கருத்து!

“பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்” – பெற்றோர் ஆசிரியர் சங்கம் கருத்து!

693
0
SHARE
Ad

Malaysiaகோலாலம்பூர் – பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வரம்பு மீற மாட்டார்கள் என்று தேசிய பெற்றோர் -ஆசியர் சங்கக் கூட்டணிக் கழகத்தின் (National Parent-Teacher Association Collaborative Council) தலைவர் மொஹமட் அலி ஹஸ்சான் தெரிவித்துள்ளார்.

பள்ளி ஒன்றின் வளாகத்தில் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் கட்டியணைத்துக் கொண்ட விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “அந்த இளவட்டங்களுக்கு வெட்கமே இல்லை” என்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல்களால் எளிதாகக் கவரப்பட்டு அதன் படி நடக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

மாணவர்களின் அது போன்ற செயல்களுக்கு பெற்றோர் வக்காலத்து வாங்கிக் கொண்டு அவர்கள் குழந்தைகள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அம்மாணவரின் தாய், மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், “அவர்கள் குழந்தைகள்.இதைப் பெரிது படுத்தக்கூடாது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: மாதிரி பள்ளி