“இத்தகைய துயரமான சூழலிலும் பிரான்ஸ் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பணிந்து விடாது. நாங்கள் ஒற்றுமையுடன் இருப்போம். நாங்கள் படும் வேதனைக்கு பதிலடி கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஐஎஸ்ஐஎஸ் ஆளுமை செலுத்தி வரும் சிரியாவின் சில பகுதிகளில் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு தீவிரவாதிகளின் பொருளாதார மண்டலங்களை தங்கள் விமானப் படை கொண்டு பிரான்ஸ் அழித்ததால், தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments