Home Featured இந்தியா தமிழ்நாடு வெள்ளம்: மீட்பு நடவடிக்கைகளில் இராணுவமும், விமானப்படையும் இணைந்தது!

தமிழ்நாடு வெள்ளம்: மீட்பு நடவடிக்கைகளில் இராணுவமும், விமானப்படையும் இணைந்தது!

561
0
SHARE
Ad

chennai-floods--_647_111715112315சென்னை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மாவட்டங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்திருப்பதோடு, விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தவிட்டுள்ளார் பாஜக தலைவர் அமிட் ஷா.

அந்த மூன்று பேர் அடங்கிய குழுவில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் மற்றும் கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் சின்னையா ஷெட்டி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களுக்கு உதவவும் மத்திய அரசு இராணுவத்தையும், விமானப் படைகளையும் அனுப்பியுள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைந்துள்ள காஞ்சீபுரத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

 

 

Comments