Home Featured நாடு “நஜிப்பின் தலைமைத்துவத்தைப் புறக்கணியுங்கள்” – மகாதீர் வெளிப்படையாகக் கடிதம்!

“நஜிப்பின் தலைமைத்துவத்தைப் புறக்கணியுங்கள்” – மகாதீர் வெளிப்படையாகக் கடிதம்!

467
0
SHARE
Ad

mahathir-mohamadகோலாலம்பூர் – சுமார் இருபது ஆண்டுகள் அம்னோவில் அங்கம் வகித்த மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைத்தளத்தில், நஜிப்பின் தலைமைத்துவத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்தப் பொதுத்தேர்தலுக்குள் நஜிப்பை வெளியேற்ற வேண்டும் என்றும் அனைத்து அம்னோ உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்தத் தலைமைத்துவத்தை 14-வது பொதுத்தேர்தலுக்குள் புறக்கணியுங்கள். அப்போது தான் அம்னோ பாதுகாப்பாக இருக்கும். மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அரசாங்கமாக இருந்து தேர்தலிலும் வெற்றி பெறும்” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று மாலை இந்தக் கடிதம் அவது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.