Home Featured தமிழ் நாடு மீண்டும் வந்த மழை – மீண்டு வருமா சென்னை?

மீண்டும் வந்த மழை – மீண்டு வருமா சென்னை?

735
0
SHARE
Ad

chennai1சென்னை – சென்னையில் இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழை, வழக்கத்தை விட பலமாக கொட்டித் தீர்த்தது. நகரின் பல முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறும் அளவிற்கு பெய்த மழை, கடந்த சில நாட்களுக்கு ஓய்ந்து இருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கி விட்டது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் கடும் மழை பெய்துள்ள நிலையில், கால் மணி நேரம் நீடிக்க வேண்டிய போக்குவரத்து, பல பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

chennai2மேலும் பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால், மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த திடீர் பள்ளங்கள் பற்றி அதிகாரிகள் கூறுகையில், “தொடர் மழை காரணமாக இது போன்ற பள்ளங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். இதற்கு, புவியியல் காரணங்கள் எதுவும் இல்லை.”

chennai3“குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் பதிப்பது, மெட்ரோ ரயில் பணி, என சாலையில் பள்ளம் தோண்டி பணிகள் செய்யப்பட்ட பின், மாநகராட்சியால் அந்த சாலை சீரமைக்கப்படுகிறது. இதில் எல்லா இடங்களிலும், மண்ணுக்கு 100 சதவீதம் அழுத்தம் கிடைக்காது. சில இடங்களில், மண்ணில் அழுத்தம் குறைவாக இருக்கும். அவ்வாறு உள்ள இடம், மழை அதிகமாக பெய்வதால், ஈரப்பதம் அதிகரித்து, அதிகளவு மண்ணை திடீரென உள்வாங்கும். இது இயற்கையாக நடப்பது தான்” என்று கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளதால், தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னை, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.