Home Featured தமிழ் நாடு தமிழக வெள்ளம்: இன்று காலை இறுதி நிலவரச் செய்திகள்!

தமிழக வெள்ளம்: இன்று காலை இறுதி நிலவரச் செய்திகள்!

612
0
SHARE
Ad

Death toll increases in Chennai floodsசென்னை: இன்று புதன்கிழமை காலை 9.00 மணி வரையிலான தமிழக வெள்ளம் குறித்த இறுதி நிலவரச் செய்திகள் – சில வரிகளில்!

  • தற்போது சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
  • அரையாண்டு தேர்வுகள் வழக்கம்போல் டிசம்பரில் நடத்தப்படாமல், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும் இந்த விதிமுறை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
  • தமிழில் மென்பொருட்களை அறிமுகம் செய்த தமிழ் ஆர்வலர் ஸ்ரீநிவாஸ் என்பவரும் அவரது மனைவியும் ஈக்காட்டுத்தாங்கலில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்றும் மறுநாள் அவர்களின் உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்.
  • சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதால் அந்நகருக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளின் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
  • நாகை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால், நாகை,  தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மின்கட்டணங்களைத் தாமதமாகச் செலுத்தலாம் – அபராதம் எதுவும் விதிக்கப்படாது என ஜெயலலிதா அறிவிப்பு
  • எதிர்வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை சென்னையில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகின்றது –
  • இன்று முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான சேதங்களை நிர்ணயிக்க தமிழக அரசு கணக்கெடுப்புகள் எடுக்கவிருக்கின்றது.
  • தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் மற்ற பகுதிகளுக்கும், நிவாரண மையங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.
  • ஊட்டியை உள்ளிட்ட, நீலகிரி மாவட்டத்தில் அடைமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மக்களும் குளிரால் வாடுகின்றனர்.
  • தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தமிழகத்தின் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.