Home Slider கார் வழக்கிற்காக சல்மான் எத்தனை கோடி செலவு செய்தார்?

கார் வழக்கிற்காக சல்மான் எத்தனை கோடி செலவு செய்தார்?

534
0
SHARE
Ad

salmanமும்பை – குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த வழக்கின் விசாரணைக்காக 25 கோடி வரை செலவு செய்துள்ளதாக, சல்மான் கானின் தந்தையும், பிரபல எழுத்தாளருமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சலீம் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் (சல்மான் கான்) இந்த விவகாரத்தை மிக எளிதாக கடந்துவிட்டதாக மக்கள் பேசுகின்றனர். இந்த விவகாரத்திற்காக அவர் சில நாட்கள் சிறையில் இருந்தார். வழக்கிற்காக 20-25 கோடி செலவு செய்துள்ளார். தற்போது அவர் வெளியாகிவிட்டார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அவருடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நானும் தற்போது மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.