இது தொடர்பாக சலீம் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் (சல்மான் கான்) இந்த விவகாரத்தை மிக எளிதாக கடந்துவிட்டதாக மக்கள் பேசுகின்றனர். இந்த விவகாரத்திற்காக அவர் சில நாட்கள் சிறையில் இருந்தார். வழக்கிற்காக 20-25 கோடி செலவு செய்துள்ளார். தற்போது அவர் வெளியாகிவிட்டார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அவருடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நானும் தற்போது மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Comments