சுங்கை பூலோ – சவுதி அரேபியா தலைமையில் 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விருப்பதற்கு மலேசியா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹமட் சல்மான் அல் சவுத் தன்னைத் தொடர்பு கொண்டு இந்த கூட்டு முயற்சிக்கு ஆதரவு கேட்டதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று சுங்கை பூலோ இராணுவ மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹிஷாமுடின், “நான் (ஆதரவு) கொடுத்துவிட்டேன். ஆசியானில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதே போல் தான் இதுவும். எனவே இதில் கடினம் என்று ஒன்று இல்லை” என்று ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.