Home Featured இந்தியா டில்லி மாணவி பலாத்கார வழக்கு: ‘மைனர்’ குற்றவாளி விரைவில் விடுதலை!

டில்லி மாணவி பலாத்கார வழக்கு: ‘மைனர்’ குற்றவாளி விரைவில் விடுதலை!

634
0
SHARE
Ad

film-delhi-gang-rape-647x450புதுடெல்லி – உருண்டோடிவிட்டன நேற்றோடு மூன்று ஆண்டுகள். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு இதே டிசம்பர் 16-ம் தேதி இரவு, நிர்பயா (ஜோதி சிங்) என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் வைத்து 6 கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டாள்.

உடலளவிலும், மனதளவிலும் அடைந்த மிகக் கடுமையான வேதனையில், மீண்டும் இந்த உலகத்தைக் கண்திறந்து பார்க்காமலேயே உயிரையும் விட்டாள்.

இந்தச் சம்பவத்தில் அம்மாணவியைக் கற்பழித்த  6 பேரில் ஒருவரான  ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மீதமுள்ள ஐந்து பேரில் நால்வர் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள ஒருவர் சிறுவயது என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில், நிர்பயாவின் மூன்றாம் ஆண்டு நினைவு கூறல் நடைபெற்றது. சமுக சேவகி ஷபான ஆஸ்மி உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்நிகழ்வில் பேசிய  நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நிர்பயா என்று செய்திகளில் பெயர் மாற்றி சொல்லப்படும் தனது மகளின் நிஜப் பெயர் ஜோதி சிங் என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.

ஜோதி சிங் என்ற தனது மகளின் நிஜப் பெயரைச் சொல்வதில் தனக்கு எந்த வெட்கமும் கிடையாது என்று கூறியுள்ள அவர், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களும் அவரது குடும்பத்தினரும் தான் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் விடுதலையாகவுள்ள ‘மைனர்’ குற்றவாளி தான், தனது மகள் கற்பழிப்பில் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதாக மருத்துவ அறிக்கைக்கள் கூறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

“அவனுக்கு 16 வயதாக இருந்தால் என்ன? 18 வயதாக இருந்தால் என்ன? குற்றத்தின் தன்மையை தான் பார்க்க வேண்டும். வயதை பார்த்து முடிவெடுப்பதில் எந்த  வித நியாயமும் இல்லை” என்றும் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.