சிங்கப்பூர் – நேற்று இரவு 8.14 மணியளவில் சிங்கப்பூர் நீரிணையில் ரசாயணக் கப்பல் ஒன்றுடன், சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது.
இவ்விபத்து நிகழ்ந்த போது, அதில் 12 பணியாளர்கள் இருந்துள்ளனர். அப்போதே 6 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
தற்போது கப்பலில் இருந்த மற்ற 6 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Comments