தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், தி.நகரில் நேற்று நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தில், சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்தும், கமல்ஹாசன் அரசை விமர்சித்த விவகாரம் குறித்தும், நடிகர் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தோல்வி அடைந்து பொறுப்புகளை, நாசர் அணியினரிடம் ஒப்படைத்த சமயத்தில், அடுத்த 10 நாட்களுக்குள் கணக்குவழக்குகள் அனைத்தையும் ஒப்படைப்பதாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.