Home Featured கலையுலகம் கணக்கு வழக்குகளை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை – கார்த்தி குற்றச்சாட்டு!

கணக்கு வழக்குகளை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை – கார்த்தி குற்றச்சாட்டு!

632
0
SHARE
Ad

Sangam_சென்னை – நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முந்தைய கணக்கு வழக்குகளை இன்னும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என பொருளாளர் கார்த்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், தி.நகரில் நேற்று நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தில், சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்தும், கமல்ஹாசன் அரசை விமர்சித்த விவகாரம் குறித்தும், நடிகர் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

sarathஅப்போது நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, “நடிகர் சரத்குமார் இன்னும் முழுமையான கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால், விரைவில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தோல்வி அடைந்து பொறுப்புகளை, நாசர் அணியினரிடம் ஒப்படைத்த சமயத்தில், அடுத்த 10 நாட்களுக்குள் கணக்குவழக்குகள் அனைத்தையும் ஒப்படைப்பதாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.