Home Featured வணிகம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் சாதனங்களுக்கு ஏர் ஆசியா தடை!

லித்தியம் பேட்டரியால் இயங்கும் சாதனங்களுக்கு ஏர் ஆசியா தடை!

584
0
SHARE
Ad

Air Asiaகோலாலம்பூர் – விமானத்தில் லித்தியம் பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து சாதனங்களுக்கு ஏர் ஆசியா நிறுவனம் தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் விமானங்களில் லித்தியம் பேட்டரியால் இயங்கும் தனிப்பட்ட போக்குவரத்து சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

இங்கே அடைப்புக்குறிக்குள் இருக்கும் சாதனங்களை (hoverboards, Segways, mini-Segways, electronic scooters, solowheels, airwheels, balance wheels, similar equipment) விமானத்தில் கொண்டு செல்ல முடியாது என ஏர் ஆசியா குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் அல்லது இயங்கும் சாதனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்றும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

சக்கர நாற்காலிகள் அல்லது இயங்கும் சாதனங்களின் எடை 85 கிலோவிற்குள் இருக்க வேண்டும் என்றும் ஏர் ஆசியா கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனிடையே, பேட்டரியால் இயங்கும் பொருட்களை கொண்டு செல்ல நினைக்கும் பயணிகள் மேல் விவரங்களுக்கு ஏர் ஆசியா இணையதளத்தில் கொடுக்கப்பட்டு வரையறைகளைப் பின்பற்றுமாறும் ஏர் ஆசியா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மாதம் மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அமெரிக்கா, அலஸ்கா ஏர்லைன்ஸ், ஜெட் புளூ, டெல்டா, அமெரிக்கன் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் ‘self-balancing electric scooters’ என்றொரு மின்னணு சாதனைத்தை தடை செய்தன.

அதனைப் பின்பற்றி, ஏர் ஆசியாவும் இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.