Home Featured நாடு தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!

தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!

651
0
SHARE
Ad

Mukhriz-Mahathir-Featureஅலோர் செடார் – தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது கெடா மாநிலம்.

எனினும், இந்த விடுமுறை சில நேரங்களில் மட்டுமேயான மாநில விடுமுறை (occasional state holiday) என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று கூடிய மாநில செயலவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தைப்பூசத்தை பொதுவிடுமுறையாக அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்ய மாநில அரசாங்கம் முன்வருமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த முக்ரிஸ், “மாநிலத்தின் பொதுவிடுமுறை ஒதுக்கீடு முழுவதும் நிரப்பப்பட்டு விட்டதால், தைப்பூசத்தை பொதுவிடுமுறையாகப் பதிவு செய்ய இயலாது” என்று இன்று விஸ்மா டாரும் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.