Home Featured வணிகம் மூன்று புதிய பாதைகளில் விமானப் போக்குவரத்து – ஏர் ஆசியா அறிவிப்பு!

மூன்று புதிய பாதைகளில் விமானப் போக்குவரத்து – ஏர் ஆசியா அறிவிப்பு!

605
0
SHARE
Ad

AirAsiaகோலாலம்பூர் – ஆசிய அளவில் மலிவு விலை விமானப் போக்குவரத்தை சிறப்பாக மேம்படுத்திய ஏர் ஆசியா, இந்த மாத இறுதிக்குள் கோத்தா கினபாலு, லங்காவி மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் இருந்து மூன்று புதிய அனைத்துலக பாதைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய பாதைகள் தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், எதிர்வரும் 22-ம் தேதி கோத்தா கினபாலுவில் இருந்து வுஹானுக்கும் (மத்திய சீனா) 24-ம் தேதி லங்காவியில் இருந்து குவான்ஸ்சோவிற்கும் (சீனா), 25-ம் தேதி பினாங்குவில் இருந்து ஹோசிமினுக்கும் (வியட்நாம்) நேரடி விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் ஆசியா வர்த்தகத் தலைவர் ஸ்பென்சர் லீ கூறுகையில், “புதிய வருடம் மிக அற்புதமாகத் தொடங்கி உள்ளது. ஜனவரி எங்களுக்கு பரபரப்பான மாதமாக அமைந்துள்ளது. தினசரி செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு புதிய விமானப் பாதைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த பாதைகளும் ஏர் ஆசியாவிற்கு இலாபத்தைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.