Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் வேண்டவே வேண்டாம் – தலைமையிடம் கெஞ்சும் திமுகவினர்!

விஜயகாந்த் வேண்டவே வேண்டாம் – தலைமையிடம் கெஞ்சும் திமுகவினர்!

555
0
SHARE
Ad

vijayakanth-slams-karunanidhiசென்னை – விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் என திமுக தலைமை நம்பிக் கொண்டு இருக்க, திமுக-அதிமுக என பாரபட்சம் பார்க்காமல் விஜயகாந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுவில், “அதிமுக – திமுக இரண்டு கட்சிகளுமே ஒன்று தான். திமுகவுக்கு 28 சதவீதம் ஓட்டுக்கள் (வாக்குகள்) இருக்கிறது என்றால், 8.33 சதவீதம் ஓட்டுள்ள என்னை ஏன் வெட்கமே இல்லாமல் தேடி வர வேண்டும்” என்று அவர் கூறியது திமுகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

இது குறித்து தலைமையிடம் முறையிட்டுள்ள திமுகவினர், “கடந்த 2011-ன் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த விஜயகாந்த், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தன்னால் தான் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார் என்று கூறினார். இந்த செயல் ஒருவேளை திமுக கூட்டணியில் அவர் வந்தாலும் தொடரும். பொதுக்குழுவில், ‘வெட்கமே இல்லாமல் என்னோடு கூட்டணி அமைக்க திமுக முயற்சிக்கிறது’ என்று அவர் கூறிய பின்னர்,  இனியும் திமுக அவருடன் கூட்டணி வைத்து தரம் தாழ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொண்டர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட திமுக தலைமை, விஜயகாந்துடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இரகசியத் தகவல்கள் வந்துள்ளன.