Home Featured நாடு ரயானிக்கு சர்ச்சைக்குரிய மத போதகர் ரிதுவான் டி ஆதரவு!

ரயானிக்கு சர்ச்சைக்குரிய மத போதகர் ரிதுவான் டி ஆதரவு!

573
0
SHARE
Ad

Ridhuan_Teeகோலாலம்பூர் – ஷரியா இணக்கம் கொண்ட புதிய விமானச் சேவை நிறுவனமான ரயானி ஏர்லைன்சுக்கு சர்ச்சைக்குரிய மதபோதகரான ரிதுவான் டி அப்துல்லா தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனத்தின் தலைவர் இஸ்லாமியராக இல்லாவிட்டாலும், அவர்களுக்குத் துணையாக அல்லாஹ் எப்போதும் துணையாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரயானி ஏர் நிறுவனத்திற்கு…. நான் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரே பறந்து செல்லுங்கள். பயணிகள் கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பார்கள்”

#TamilSchoolmychoice

“நான் எப்போதும் உங்களைத் தேர்ந்தெடுப்பேன். நீங்கள் இஸ்லாமியராக இல்லாத போதும் (ரயானி ஏர் நிறுவனர்) அல்லாஹ் எப்போதும் உங்களோடு இருப்பார்” என்று ரிதுவான் மலாய் நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.