பாங்காக் – தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் கடற்கரையில், விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த விமான பாகம் மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 370 ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் நக்ஹோன் சி தம்மராட் மாகாணத்தின் கிராமப் பகுதி ஒன்றில், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் நீளமும் கொண்ட உலோகப் பொருள் ஒன்று, நேற்று அந்தப் பகுதியில் உள்ள கிராமவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தாய்லாந்து அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று உலோக பாகத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருளை தற்போது அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்