Home Featured உலகம் தாய்லாந்து கடற்பகுதியில் எம்எச் 370 பாகம் கண்டுபிடிப்பா?

தாய்லாந்து கடற்பகுதியில் எம்எச் 370 பாகம் கண்டுபிடிப்பா?

1004
0
SHARE
Ad

thailandபாங்காக்  – தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் கடற்கரையில், விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த விமான பாகம் மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 370 ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் நக்ஹோன் சி தம்மராட் மாகாணத்தின் கிராமப் பகுதி ஒன்றில், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் நீளமும் கொண்ட உலோகப் பொருள் ஒன்று, நேற்று அந்தப் பகுதியில் உள்ள கிராமவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தாய்லாந்து அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று உலோக பாகத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருளை தற்போது அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்

Comments