கோலாலம்பூர் – தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், முக்ரிஸ் பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரையை கெடா அரண்மனை நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுவதையும் நஜிப் மறுத்துள்ளார்.
“எந்த ஒரு நிராகரிப்பும் இல்லை. எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது” என நேற்று அம்னோ உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நஜிப் தெரிவித்துள்ளார்.
மேலும், அம்னோ உச்சமன்றம் அரசப் பேராளர்கள் மன்றத்திடம் (regency council) பெயர்களை வழங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முக்ரிஸ் மகாதீர், மன்றத்தால் அழைக்கப்படவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.