Home Featured நாடு கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!

கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!

654
0
SHARE
Ad

dengue_7கோலாலம்பூர் – மலேசியாவில் ஜிகா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாடெங்கிலும் டிங்கி பாதிப்பு அதிகம் இருப்பதால், அதே ஏடிஎஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தாக்குதலும் இருக்கும் என்று துணை சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் லோக்மான் ஹாலிம் சுலைமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க மலேசியர்கள் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவில்லை என்றும் டாக்டர் லோக்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, உலகமெங்கும் அதிவேகமாகப் பரவி வரும் ஜிகா வைரசை ஒழிப்பதும், கட்டுப்படுத்துவதும் குறித்து விவாதிக்க பிப்ரவரி 1-ம் தேதி சிறப்பு அவசரக் கூட்டம் ஒன்றை உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிங்கி போல கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தற்போது உலக அளவில் 23 நாடுகளில் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக  தாய்மார்களின் குழந்தைப் பிறப்பில் பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த ஜிகா வைரசிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குணமாக்கும் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.