Home Featured உலகம் அறிவியல் சோதனை: தண்ணீருக்கடியில் தன்னையே சுட்டுக் கொண்ட ஆய்வாளர்!

அறிவியல் சோதனை: தண்ணீருக்கடியில் தன்னையே சுட்டுக் கொண்ட ஆய்வாளர்!

764
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் (Physics) ஆய்வாளர் ஆண்ட்ரியாஸ் வால். இவர் நட்பு ஊடகங்களில் மிகவும் பிரபலம்.

காரணம், இயற்பியல் சோதனைகளை நிரூபிக்க தனது உயிரைப் பணயமாக வைத்து ஒவ்வொன்றையும் நிகழ்த்தி வெற்றியடைந்து வருகின்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 46 அடி உயரத்தில் தன்னைக் கயிற்றால் கட்டிக் கொண்டு குதித்தார். தற்போது புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் நீச்சல் குளம் ஒன்றில் நின்று கொண்டு தனக்கு எதிரே துப்பாக்கியை வைத்து இயக்கி அந்த குண்டு தன் மேல் படாத வண்ணம் அறிவியல் சோதனையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளார்.