அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் அழிந்த உயிரினங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஜென்யார்னிஸ் நியுடொனி’ (Genyornis newton) என்ற ஒரு மிகப் பெரிய பறவை இனம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மனிதவாடை இல்லாத காலக்கட்டத்தில் பூமியில் வாழ்ந்து வந்துள்ளது. உருவத்தில் இருந்த அந்த இராட்சதத் தன்மையால் இந்தப் பறவையினால் பறக்க முடியவில்லை.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஜென்யார்னிஸ் பறவையின் எச்சங்களும், தடையங்களும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளதன் மூலம் ஜென்யார்னிசின் வரலாறு தெரிய வந்துள்ளது.