சென்னை – அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெயரை கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அடைந்திருக்கிறார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சுந்தருக்கு, 273,328 ஆல்ஃபா பங்குகளைத் தந்துள்ளது.
அதன் மதிப்பு 199 மில்லியன் டாலர்கள் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.