கோலாலம்பூர் – கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
நஜிப்போடு சேர்த்து சில அமைச்சர்களையும் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, டாயிசுடன் தொடர்புடைய 13 பேர், உள்துறை அமைச்சர் (சாஹிட்), தற்காப்பு அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கடத்த திட்டமிட்டிருந்தனர்” என்று நாடாளுமன்றத்தில் சாஹிட் தெரிவித்துள்ளார்.