Home Featured தமிழ் நாடு தேமுதிகவிற்கு ரூ. 500 கோடி வழங்க திமுக முன்வந்தது – வைகோ!

தேமுதிகவிற்கு ரூ. 500 கோடி வழங்க திமுக முன்வந்தது – வைகோ!

616
0
SHARE
Ad

vaikoமதுரை – தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, திமுக தலைவர் கருணாநிதி 80 தொகுதிகளும், 500 கோடி ரூபாய் பணமும் தருவதாக துண்டி சீட்டில் கைபட எழுதி கொடுத்ததாக வெளியான செய்தி உண்மைதான் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

80 தொகுதிகளும், 500 கோடி ரூபாயும், திராவிட முன்னேற்ற கழகம் தருவதற்கு முன்வந்ததாக ஒரு பத்திரிகையில் இன்றைக்கு செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும். நான் கேள்விப்பட்டதில், கருணாநிதி ஒரு துண்டு சீட்டில் எழுதியே கொடுத்தனுப்பியதாகவும், ஆக, 80 தொகுதிகளும், 500 கோடி ரூபாயை, உதறி எறிந்து, உதாசினமாக தூக்கி எறிந்துவிட்டு,

இந்தக்கூட்டணியில் போனால் 50, 60 சீட்டுகள் ஜெயிக்கலாம் என்று நினைக்காமல், எதற்கு போனத் தேர்தலில், திமுகவை தோற்கடிக்க சென்றாரோ, அதே ஊழல் கூட்டம் தானே மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்து, 300 கோடி, 500 கோடி என்று சொல்லப்பட்ட தொகையை என் கால் தூசுக்கு சமம் என்று தூக்கிப்போட்டிருக்கிறாரே, ஆகவே நேர்மையைப் பற்றி சொல்லத் தகுதி உள்ளவர் சகோதரர் விஜயகாந்த் என வைகோ கூறினார்

#TamilSchoolmychoice

 

Comments